Total Pageviews

Sunday, August 28, 2011

வந்தது வந்தாச்சு...வாழனும் என்றாச்சு.!!

நானாக நான் இருந்தால் இந்த உலகம் 
என்னை கண்டு வியக்கிறதே !!!
நான் மாற்றம் கொண்டால் என் உலகம் 
என்னை வெறுக்கிறதே !!!
எவனும் சரியில்லை...

இங்கே..
எதுவும் நிலையில்லை புரிகிறதே..!
காதலே கனவென
விதியே வழியென தெரிகிறதே..!
நினைவுகள் நிரம்பியது நெஞ்சத்தில்..
உணர்வுகள் உடைந்தது உறவுகளில் ..
உறக்கம் தொலைத்தோம் இரவுகளில்..
ஏமாற்றம் அடைந்தோம் ஏக்கங்களில் ..!!!
வந்தது வந்தாச்சு...
வாழனும் என்றாச்சு..
உறவுகள் துறந்தாச்சு..
உண்மைகள் உணர்ந்தாச்சு..
தோல்வியே தொடக்கமாச்சு..
தன்னம்பிக்கையே துணையாச்சு..
காத்திருந்து நாளாச்சு..
காதலே கனவாச்சு..!

Sunday, August 14, 2011

காதலை உணர்வது இவ்வாறோ..??

காதல் கடலில் என் ஆசை அலைகளில் மட்டும் மிதக்க போராடுகிராயே..!!
ஆசைகளுக்காக மட்டும் தான் காதலா..??
உன் கற்பனையில் எனது உயிரில் உன் கிளைகளுக்கும் வேர்களை வரைகிராயே..!
கற்பனைகளில் மட்டும் தான் இந்த காதலா..??
இவை அனைத்தும் காதல் இல்லையென..
ஒரு நொடியாக இருந்தாலும் ஓராயிரம் உறவுகளையும் உணர்வுகளையும் 
நமக்கு உணர்த்துவது தான் இந்த காதலென..
எனக்கு புரிய வைத்தாயடி இன்று..
என்றும் உயிராக உன் உடன் நிற்பேன்..!
உன் இதயத்துக்கு இனையாக துடிப்பேன்..! 

Tuesday, August 9, 2011

Love makes Life beautiful..!

உதிர்ந்த பூக்களுக்கு கண்ணீர் உண்டா..??
அவை உதிர்வதே இந்த பூமியின் மீது காதல் கொண்டா..??
களையும் மேகங்களால் வானத்திற்கு காயம் உண்டா..??
அவை களைவதே நீல வானத்தின் வண்ணத்தை அதன் மனதில் கொண்டா..??
காதலினால் அடைந்த வெற்றி அழகென்றால்...
அதே காதலுக்காக ஒருவன் தன்னையே வீழ்த்திக்கொள்வதும் அழகு தான்..!! 
காயங்களானாலும் கண்ணிரானாலும் அது காதலினால் காவியமாகும்..!!
முத்துகளானலும் முட்களானாலும் அது காதலினால் சிற்பமாகும்..!!

உண்மையான காதல் உதிர்ந்தாலும் உயிரிழக்காது.. 
மெய்யான காதல் மெலிந்தாலும் மரணம் தொடாது..!! 

Sunday, August 7, 2011

!! தோழன் !!

தவறை தட்டி கேட்பான் தோழன்..!
தடுக்கி விழுபவனை தூக்கி விடுவான் தோழன்..! 
எந்த உயரத்தில் நின்றாலும்.. 
உண்மைகளை உதிராமல்.. 
உரிமைகளை விட்டுகொடுக்காமல்..
உதவிகளை எதிர்பாராமல்..
நட்பை உணர்ந்த தருணம் முதல் மரணம்  வரை..
உறவுகளின் உச்சமாய் நட்பை எண்ணுவான் தோழன்..!
நட்பு என்பது எண்ணிக்கையில் அல்ல..
நட்பின் மேலே உள்ள நம்பிக்கையில் அதிகரிக்க வேண்டும்..! 
நண்பர்கள் தின நல்வாழ்த்துக்கள்..!