Total Pageviews

Friday, April 20, 2012

உயிர் நீ தான் அன்பே .!!

உயிர் நீ தான் அன்பே .!!







என் தேடல்களேல்லாம்  உன்னுடன் இருக்க..நீ இன்றி இருளில் இறக்குதடி.
எங்கே சென்றாய் என்னவளே..??
என் சோகங்களெல்லாம் உன்னுடன் உரைத்திருந்தேன்..பேசக் கூட துணையின்றி தவிக்கின்றேன்..
எங்கே சென்றாய் ஸ்வாசமே ..??
நினைவோடு நெஞ்சம் நிறைந்திருக்க..
நீ இல்லாமல் கண்களில் நீரும் நெருப்பாய் என்னை சுட்டெரிக்குதடி..!
கண்களோடு காதலும் கனவும் கவிதை சொல்ல..
அவை அரங்கேறாமல் அண்மையில் அலைபாயுதடி..!
தோல்விகளின் தொடக்கத்தில் நீ இருக்க..
தோற்றபின் தடுமாறிய என் தோள்களை தாங்கி பிடிக்க..
துயரம் தோல்விகளில் இல்லை காதலே.. அவை எனக்கு..
உன் தோள்கள் இல்லாததால்..!
வீழ்ந்து அதன் வழியில் என் உயிரை தொலைக்கும் முன்னே..
நான் வெல்ல உன் விழிகள் வேண்டும் பெண்ணே..!
மரணத்தை கண்டு பயமே காதலே..
உன் மடியில் உறங்காமல் அது என்னை நெருங்கிடுமோ என்று..!
ஒவ்வொரு நொடியும் ஓராயிரம் நினைவுகளை என் மனம் சுமந்து செல்ல..  
ஒவ்வொரு நிமிடமும் வலிக்குதே..வலிகளிலும் மனம் உன்னை நினைக்குதே.!
புகைப்படத்தில் உன் புன்னகை கண்டே என் காலம் பாதி கடந்தேனே..
என் புண்களுடன் உன் நகை சேரவே ஏக்கங்கள் கொண்டேனே..!
உன்னுடன் வாழவே உள்ளம் முறையிடுதே..!
தீ எனத்  தெரிந்தும் மெழுகாய் உருகிடுதே..!
துயர் தீ மூட்டுதே..
அனல் அலைபாயுதே..
கவிதையில் காதல் சொல்லுதே..என் மனம்..
உன் நினைவில் நிறைந்தோடுதே..!
காதல் குருதியில் உயிர் கொண்டு..
உன் விழிகளில் விதைத்து என் வழிகளில் விரைந்தோடுதே..!
நிஜமடி பெண்ணே..!
நம் காதல் என் கரங்களில் உயிர் கொண்டு..
கவிதையில் உன் உருவம் நான் காண்கிறேனே..!
நாம் காதல் காணாமல்..
உன்னுடன் ஊடல் கொள்ளாமல்..
நம் உயிர் இந்த உலகில் தோன்றாமல்..
என் உடல் கல்லறைக்கு செல்ல மறுத்திடுமே!
வதைக்காதே பெண்ணே.. 
சிரிக்கிறார்கள் பின்னே.. 
வலிக்கிறது நெஞ்சே..
என் உலகம் மறையும் முன்னே..
வந்துவிடு உயிரே ......
உயிர் நீ தான் அன்பே .!!















No comments:

Post a Comment