Total Pageviews

Sunday, August 28, 2011

வந்தது வந்தாச்சு...வாழனும் என்றாச்சு.!!

நானாக நான் இருந்தால் இந்த உலகம் 
என்னை கண்டு வியக்கிறதே !!!
நான் மாற்றம் கொண்டால் என் உலகம் 
என்னை வெறுக்கிறதே !!!
எவனும் சரியில்லை...

இங்கே..
எதுவும் நிலையில்லை புரிகிறதே..!
காதலே கனவென
விதியே வழியென தெரிகிறதே..!
நினைவுகள் நிரம்பியது நெஞ்சத்தில்..
உணர்வுகள் உடைந்தது உறவுகளில் ..
உறக்கம் தொலைத்தோம் இரவுகளில்..
ஏமாற்றம் அடைந்தோம் ஏக்கங்களில் ..!!!
வந்தது வந்தாச்சு...
வாழனும் என்றாச்சு..
உறவுகள் துறந்தாச்சு..
உண்மைகள் உணர்ந்தாச்சு..
தோல்வியே தொடக்கமாச்சு..
தன்னம்பிக்கையே துணையாச்சு..
காத்திருந்து நாளாச்சு..
காதலே கனவாச்சு..!

No comments:

Post a Comment