உயிரிலே ஊஞ்சலாடி உறவாடும் காதலே..
உன் அன்பிலே என்னை கட்டி அணைப்பாயா என்றுமே..?
கனவிலே கண்கள் கட்டி களவாடும் காதலே..
உன் அன்பிலே என் தவறை தட்டி தடுப்பாயா என்றுமே..??
மனதில் மாயமாக தோன்றி மகிழ்விக்கும் காதலே..
உன் பிரிவை உணராமால் உறவு கொள்வாயா என்றுமே??
மின்கம்பிகளில் அமரும் பறவைகள் மின்சாரத்திற்கு பலியாவதில்லை..!
அதே போல....
உன் கோபத்தில் என் காதல் அமர்ந்தால்...
அதன் மின்சாரத்திற்கு என்றும் நான் பலியாவதில்லை..!
என் கனவுகளின் கண்களே..!
உன் கண்ணீரை துடைக்க என் கரங்கள் விரைந்திடுமே..!
என் உயிரின் உணர்வுகளே..!
உன் இதயத்தில் இன்பத்தை புதைக்க இடைவேளை இன்றி இன்பம் துறப்பேனே..!
உன் துணையின்றி "என் உலகம்" மறந்தேனே..!
நீ உடனிருந்தால் இந்த உலகம் அனைத்தும் மறைந்திடுதே ..!
No comments:
Post a Comment