உறக்கத்தில் அந்த நிலவும் என் தலையணை தழுவ கண்டேன்..!
என் கண்கள் கடலில் அவள் கார்மேகங்கள் காதலில் மிதக்க கண்டேன்..!
என் கனவில் நான் கண்ட வானவில்லா நீ..???
என் இருளில் நான் தேடிய முழுநிலவா நீ..???
உன் அன்பின் வாசத்திலே என் புன்னகை பூக்குமே..!
உன் காதலின் தாக்கத்திலே என் காயங்கள் மறையுமே..!
என் தோட்டத்தில் நீ முட்களாக இருந்தாலும் மலர்களாக..
என் மனம் அதை ஏற்று கொள்ளும்..!
என் கண்களின் கண்ணீராய் நீ இருந்தாலும் கடவுளின் தீர்த்தமாக..
என் காதல் அதனை விரும்பி பருகும்...!
No comments:
Post a Comment