Total Pageviews

Friday, November 4, 2011

காரணம் என்னடி..?? காதல் தானடி..!!

போகாதே நில்லடி..! 
பதில் சொல்லி விட்டு செல்லடி..!
இமைகள் இணையாமலே.. 
நான் கண்ட கனவில்.. 
என் கவிதைகளும் உன்னால் காயமடையுதே..!
மனதிற்கு முகங்களில்லாமலே... 
உன் பிரிவை அறிந்து ..
அதன் கண்கள் உன்னை தேடிடுதே..!
காரணம் என்னடி..??
காதல் தானடி..!!
உன் நிழலும் என் மேல் விழுந்திட ஆசையடி..!
என் இரவுகளும் உன் உடன் விடிய ஏங்குதடி..!
என் கனவுகளிலும் உன் காதலின் கற்பனையே அடிக்கடி..!
என் மனதில் உன் முகம் பதிக்கும் என்  கண்ணாடி..
அதில் நம் அன்பான அடிதடி.. என்னைக் கொள்ளுதடி..!
வேள்வியே நீதானடி..!
கேள்விக்குறியானேன் நானடி..!
போகாதே நில்லடி..! 
பதில் சொல்லி விட்டு செல்லடி..!

2 comments: