கண்களென கொண்ட காதலை காண முடியவில்லை என் கண்ணாடியில்..!
அகத்திற்கு அழகு சேர்த்த அவளது அன்பை அடைய முடியவில்லை என் ஆசைகளில்..!
நொடியொன்று அவள் நினைவில்லாமல் இருந்ததுண்டு!!
இரவொன்று அவள் கனவில்லாமல் கண்டதில்லை !!
என்னை நினைக்க நேரமில்லையோ என்னுள் நிறைந்தவளுக்கு??
உன்னை மறக்க மனமில்லையே உன்னை புரிந்தவனுக்கு..!
என் விடியலில் உன் விழிகள் விழிக்கும் வரை என் விழிகள் இவ்வுலகத்தை விரும்பாது !!
உன் கண்களுடன் என் கனவை காணும் வரை என் காதலின் தாகம் தீராது..!
No comments:
Post a Comment