என் இல்லறம் சேர்த்த என் இன்பமே..!
என் கனவில் கண்டதெல்லாம்..
என் கரங்களில் கொடுத்த என் கடவுளே..!
புதைக்கிறேன் உன் பாசத்தை நீ என் உடனிருந்தால்..
பிழைக்கிறேன் இந்த புவியினில் நீ எனக்காக பிறந்ததால்..!
நம் ஒவ்வொரு நொடியும் தயிரம் தந்தாயே..
என் தனிமையை தள்ளி !!
என் ஒவ்வொரு நாடி அசைவிலும் புன்னகை இசைக்குதே..
உன் பிறந்தநாளை எண்ணி !!
முழுமதியே..
வந்தாயே துணையென என் நிழலுக்கு.!
நன்றி உரைப்பேன்..
உன்னை எனக்கென ஈன்றெடுத்த உன் அன்னைக்கு !!
இனி..
உன் கண்கள் கண்ணீர் காணாது!!
உன் கனவுகள் வெறும் கானல் நீராகாது!!
என்றும் என் காதல் விலகாது உன்னை விட்டு ..!
நம் ஊடல் உயிர் கொள்ளாது நம் உணர்வை விட்டு..!
உன்னுடன் என்றும் உலவும் என் காதலின்..
பிறந்தநாள் வாழ்த்துக்கள்..!
No comments:
Post a Comment