தோழா தோள் குடு துனிபவனுக்கு..!
ஊக்கம் ஊட்டி விடு உயர்வதற்கு..!
துணிந்திடு துயரத்தை நீக்கு..
விழித்திடு வியர்வையில் வளர்ந்திடு..!
தனித்திடு தன்னம்பிக்கை வளர்த்திடு .. !
மகிழ்ந்திடு மரணத்தை மறந்திடு ..!
சிந்திக்கும் சொந்தம் சிறையை விட்டு சீறாது
புரிந்துகொள் ..!
உண்மையான சொந்தம் அந்த சிறையையே சிதைக்காமல்
நம்மை சீண்டாது ..!
தெரிந்துகொள் ..!
மனநிலை மாற்றடா..
மலையளவே நம் மனமடா..!
மாயம் செய்து மாற்றத்தை நிகழ்தடா..!
உண்மையை என்றும் உணர்த்தடா..!
உன்னை உயர்த்தி உயரத்தில் நிறுத்துடா..!
உழைத்து உயரத்தை உறுக்குடா..!
விழித்திடு தோழா..!
உலகத்தை வியத்திடு..!