Total Pageviews

Monday, November 7, 2011

இப்படிக்கு காதல்...!! - My 25th Blog post!!

பூக்கள் தன் மேல் விழுந்த பண்ணீரை புரிந்தும் பிரிவதுண்டு..!
ஆனால் புரிவதுண்டோ???
இந்த புரியாத புவியினில்... 
ஒருவர் நம்மை புரிந்த பின்பும் பிரிவது பிழையென்று..??
காதல் என்றும் ஒன்று தான்!!
அது நம் எண்ணங்கள் அல்ல
அதை எண்ணிக்கையிட..!!
காதல் - நம் சிந்தனைகளின் சிகரம்..!
நம் சிந்தையின் சின்னம்..!  
என்னவளே..
சினம் கொண்டு சேற்றில் நீ என்னை சிதைத்திடலாம்..!
உன் கண்களை காண விடாமல் நீ என்னை காயபடுத்திடலாம்..!
ஆனால்..
உன் நினைவுகளில்லாமல் என்னை நிகழ வைக்க முடியாது..!
உன் கனவுகளில்லாமல் என்னால் கவிதைகள் உரைதல்லாகாது..!
காதலே..
கரங்களால் என் காதலை உன் கரையோரத்தில் கலந்திடுவேன்..!
அங்கே..
மறைந்திருந்து உன் முகம் கண்டே ஒரு யுகம் முடித்திடுவேன்..!
பணிந்து போவது என் காதலின் பண்பாயிற்று..!
இந்த பண்பை நீ படராதலால் நம் காதலுக்கு இதுவே முடிவாயிற்று..!  
என்னுள் நிறைந்தவளே..
விட்டு கொடுத்தேன் பல விதங்களை உன் விழிகளுக்கென்று..!
ஆனால் இன்று..
என்னை விட்டு சென்றாயே அவை எதற்கென கேட்டு நின்று..!
என் பிரிவை உன் புராணத்தில் பதிக்க மாட்டேன்..!
அதன் வலியை உணர்ந்த பிறகும்..
உன்னிடம் அதை நிலைக்க விட மாட்டேன்..!
என் உயிர் - உன் உறவென உணர்ந்து விட்டேன்..!
என் களம் - நம் காதலென கொண்டு விட்டேன்..!
என் கவிதையே..
என் கல்லறையும் நாளை..
அதன் மேல் நீ வைத்த பூக்கள் மீது காதல் கொள்ளும்..!
அப்போது..
கார்மேகங்களும் என் கண்களுக்காக கண்ணீர் சிந்தும்..!
இன்று சுகங்களை தேடும் உன் சுயநலம்..
ஆனால் அதன் காரணத்தால் நீ சிதறியதோ உன்.. 
நாளைய மனபலம்..!
காதல் கொண்டேன்..!
உன் மேல் அல்ல..
உன்னை..உன்னை மட்டுமே என் காதலாக கொண்டேன்..!
                                                                                        - இப்படிக்கு காதல்..!!!






Friday, November 4, 2011

காரணம் என்னடி..?? காதல் தானடி..!!

போகாதே நில்லடி..! 
பதில் சொல்லி விட்டு செல்லடி..!
இமைகள் இணையாமலே.. 
நான் கண்ட கனவில்.. 
என் கவிதைகளும் உன்னால் காயமடையுதே..!
மனதிற்கு முகங்களில்லாமலே... 
உன் பிரிவை அறிந்து ..
அதன் கண்கள் உன்னை தேடிடுதே..!
காரணம் என்னடி..??
காதல் தானடி..!!
உன் நிழலும் என் மேல் விழுந்திட ஆசையடி..!
என் இரவுகளும் உன் உடன் விடிய ஏங்குதடி..!
என் கனவுகளிலும் உன் காதலின் கற்பனையே அடிக்கடி..!
என் மனதில் உன் முகம் பதிக்கும் என்  கண்ணாடி..
அதில் நம் அன்பான அடிதடி.. என்னைக் கொள்ளுதடி..!
வேள்வியே நீதானடி..!
கேள்விக்குறியானேன் நானடி..!
போகாதே நில்லடி..! 
பதில் சொல்லி விட்டு செல்லடி..!