என்னுடன் என்னவளிருக்க இனி எங்கவள் என்றெண்ணம் என்னுள் எழுந்திருமோ??
கண்களில் காதல் கலந்திருக்க இனி என் கனவுகளும் கவிதையாகுமோ??
பனித்துளியே நீ என் பக்கமிருக்க ஏக்கமே..
என் நிழலிலே உன் பிம்பம் பிறந்திட பிரியமே..!
தாக்கிடுமே..!
உன் துயரம் என்னை தாக்குதே..!
கொன்றிடுமே..!
உன் மௌனம் என்னை கொள்கிறதே..!
இனி..
உன் புன்னகை என்னுள் ஒலிக்காவிட்டால்..
என் மொட்டுகளும் பூக்காமல் வாடிடுமே..!
நம் கைகோர்த்து கடக்கும் பாதையெங்கும் பதிந்த..
நம் பாதங்கள் புவியிடம் நம் காதலை சொல்லட்டுமே..!