வாடா நண்பா முன்னாடி..
வாழ்க்கை இருக்கு வாழ்ந்து முடி!!
முயற்சி பண்ணி முறியடி..
வெற்றி விரைந்திடும் உன் விழி தேடி!!
போராடும் மனமே புரட்சியை ஏற்படுத்தும்!
இன்றைய அவமானமே..நாளை உன் புகழுக்கு காரணமாகும்..!
துணிந்த பின் தயக்கம் என்ன???
நாளை நமதே..!
இன்று...மயக்கம் என்ன..???
தோல்வியிடம் தோற்றுவிடாதே..!
வெற்றியை கண்டு வீழ்ந்துவிடாதே..!
உன் உழைப்பு மறுக்கப்படும் இன்றைய தோல்வியில்..!
இதே உழைப்பு போற்றப்படும் நாளைய வெற்றியில்..!
நம் வழிகள் வெற்றியில் விதைக்கப்பட வேண்டும்..!
அதன் வழியில் விண்ணையும் வீழ்த்த கூடும்..!
பாதையை மாற்றடா..!
இது வெற்றியின் தாகமடா..!
புரிந்து செயல்படுடா..!
புது தொடக்கத்தை பதிவு செய்யடா..!
இடியையும் தாங்கும் மலைக்கு புயல் ஒன்றும் பெரிதல்ல..!
துயரம் கடந்த துணிவிற்கு தோல்விகள் மட்டும் முடிவல்ல..!