நான் எழுந்து வந்தேன் திரையிட்ட ஜன்னல் முன்பு
கதிரோளி
சூழ அதை திறந்து நின்றேன் என் மனம் தொட்ட மங்கை கண்டு
பொன்சிரிப்பால்..
அவள்
மயில்சிறகுகளான
கூந்தலால்
என் அகத்தை இசைத்தால் என்னவள்..!
வெண்ணிற ஆடையில் அவள் வெட்கம் வெளிப்பட..
வெளிச்சத்திற்கு வந்தது வெகுளியான காதல்..
அவள்
தான்.. இனி அவள் மட்டும் தான்.. என்று எண்ணிய
எண்ணம் விலகும் முன்
மறைந்தால் அந்த தேவதை.
பின் விலகியது அவள் எண்ணங்கள் மட்டும் தான்
அதை விதைத்து வழிபடுகிறேன்
நினைவுகள் நிறைந்த காதலாக மட்டும் அல்ல
கடவுளாக!