Total Pageviews

Thursday, August 21, 2014






என்னை
பெற்றெடுத்த தாயிற்கும்
தத்தெடுத்த சமுதாயத்திற்கும்
நித்தம் பொறுத்த நண்பர்களுக்கும்
காதலின் காதலர்களுக்கும்

இப்புத்தகம்..

_கௌசிக் ராஜன்    




ஒரு மாலை பொழுது. ஒரு பொன் மாலை பொழுதுன்னே சொல்லலாம்.

முதல்ல ஒரு சிகரெட்ட போடனும்.

டப்புன்னு தீப்பெட்டியால பத்த வச்சேன்.

ஆனா Lover ஓட வீட்டுக்கு பக்கத்துல தம் அடிக்குறது கொஞ்சம் திகிலாதான் இருக்குது.

ஒரு நிமிஷம் கூட ஆகல.. அவ missed call குடுத்துட்டா. 

காதலிச்சா தம் அடிக்க கூட டைமே இல்ல பா.

But  போயே ஆகனும். என்ன நம்பி என் கூட வர தயாரான என் தேவதை.
பட்டுனு சிகரெட்ட கீழ போட்டு நடக்க ஆரம்பிச்சேன்.

நான் தீனா. இது வரைக்கும் என் வாழ்க்கையில யாருக்காகவும்
எதுக்காகவும் கையேந்துனது இல்ல. எல்லாம் அதுவா நடந்துச்சு.
இப்போ முதல் முறையா என் யாழினிக்காக.

தீடீர்னு என்ன நெனச்சன்னு தெரியல.. 
Gate அ திறக்குறது முன்னாடி ஒரு முடிவு எடுத்துட்டு போலாம்னு தோனிச்சு.

அவளோட அப்பா என்ன தான் பேசினாலும் கோப பட கூடாது.

கேட்-ட திறந்து உள்ளே இருக்குற ஒரு ரோஜா செடியில இருந்து பூவப் பறிச்சிட்டு திரும்புறேன்..

என் யாழினி அப்படியே ஓடி வந்து என் கண் முன்னாடி நின்னா.

“”கண்ணுல பட்றதுக்கு முன்னாடியே ஒரு பூவோட வாசம் எப்படி நம்மள கவருதோ, 
அந்த மாதிரி அவ உருவம் என் மனசுல முழுசா பதியறதுக்கு முன்னாடியே 
எனக்கு அவள பிடிக்க ஆரம்பிச்சிருச்சு”.

ஹ்ம்ம். எனக்கே சிரிப்பு வருது.

எனக்கு கவிதை எழுதியெல்லாம் பழக்கமே இல்ல,
ஆனா இவளப் பாத்தா அப்படி இருக்கும்.

அப்படியே உள்ள நரம்பெல்லாம் காதல் பாயும்!

தீனா! அப்பா கிட்ட நீ வரப் போறன்னு சொல்லிருக்கேன். கொஞ்சம் அவர் முகம் கோவமா தான் இருந்துச்சு. 
எப்படியாவது அவர் சம்மதிக்கனும்!

ஹே யாழ்! பயப்படாத.. 
உள்ள போ! நான் பாத்துக்குறேன்.

பட படன்னு பேசிட்டு இருந்தவ பட்டுனு Silent ஆயி ஒரு Look விட்டு திரும்புனா பாருங்க..

உசுர குடுக்கலாம் இவளுக்குன்னு தோனுச்சு.

அப்படியே shirtடு தல முடியெல்லாம் correct பன்னிகிட்டு உள்ள செம confident ஆ 
ஒரு நாலு step எடுத்து வெச்சேன்…


Two steps Back!



என் கால் முட்டிக்கு மேல வளர்ந்த ஒரு நாய் அப்படியே என்ன உர்ருன்னு பாத்துச்சு.

ஏதோ யாழினி JACKIE னு கூப்டதால நான் தப்பிச்சேன்.

அதையெல்லாம் cross பன்னி போயி நின்னா...

அவ அப்பா நடு Hall ல நடு sofa ல உட்கார்ந்துட்டு இருந்தாரு.


உட்காருங்க தம்பி.


அம்மாவுக்கு ஒரு வணக்கத்த போட்டுட்டு அமைதியா உட்கார்ந்தேன்.


என் பொண்னு சொன்னா உங்கள பத்தி..

நீங்க ஏதோ இயக்குனர் ஆக try பன்னிகிட்டு இருக்கீங்களாமே.


ஆமா பா.

இல்ல. போன வாரம் தான் என் பொண்ணுக்கு ஒரு பாலக்காடு மாப்பிள்ளை பாத்துட்டு வந்தேன்.                         
He is earning 50 Lacs p.a. in US.

அவர பாத்த உடனே எனக்கு நம்பிக்கை வந்துச்சு.. இவரு நம்ம பொண்ண நல்லா பாத்துப்பாருனு.
அது என்னவோ எனக்கு இப்போ உங்கள பாக்கும் போது இல்ல.

அதுவும் இல்லாம எனக்கு இந்த சினிமாவே பிடிக்காது. இதெல்லாம் இருக்கும் போது எப்படி எனக்கு உங்கள பிடிக்கும் னு நீங்க நெனைக்குறீங்க?

அவர எடுத்த வுடனே அப்பா னு கூப்டது எவளோ பெரிய தப்புன்னு இப்போ உணர்றேன். 
                                          
கேட்-டுக்கு முன்னாடி எடுத்த முடிவ இத்தோட முடிக்கனும்னு முடிவு பன்னேன்.

யாழினியோட கண்கள பாத்துட்டு திரும்பினேன்.

நான் என்ன சொல்ல போறேன்னு கேக்க ஏங்கிட்டு இருந்தது அவ பார்வையில நல்லாவே தெரிஞ்சுது.

அதென்ன sir ஆனா ஊனா ஒரு America மாப்பிள்ளைய பிடிச்சுக்கிறீங்க?
அப்ப நம்ம ஊர்லயே படிச்சு நம்ம  ஊர்லயே வேலை பாக்கனும்னு நெனைக்கற எங்களுக்கெல்லாம் நம்ம ஊர்ல பொண்ணுங்களே கட்டி வெக்க மாட்டீங்களா?

சார்.... உங்களுக்கும் எனக்கும் ஒரே வித்தியாசம் தான். 
உங்க நம்பிக்கை பணத்து மேல என் நம்பிக்கை அத குடுக்குற வியர்வை மேல.

எனக்கு பிடிச்ச உழைப்புக்கு ஒரு சின்ன மரியாதை கெடச்சா போதும்..
அது கொஞ்சமா கூட இருக்கலாம்!

ஆனா அதோட காதல் பெருசு.                                                     
அது போதும் Sir!                                                                                         
உங்க பொண்ண ஒரு பொக்கிஷமா தாங்குவேன்.

சினிமாக்காரன் ல நீ! அதான் நல்லா பேசற. இவ என் பொண்ணு. 
இவள யாருக்கு கட்டி குடுக்கனும்னு எங்களுக்கு தெரியும்.

சார்..யாழினி உங்களோட பொண்ணு தான்.
அவளுக்கு எது நல்லதுனு முடிவெடுக்க உங்களுக்கு எல்லா உரிமையும் இருக்கு!                          
ஆனா, அது உங்க பொண்ணுக்கு பிடிக்கலன்னா அது உங்களோட உரிமை இல்ல.. கட்டளை!

You don’t deserve my respect for that!

டப்புனு திரும்பி என் shirt pocket ல இருக்குர Ring அ எடுத்து, 
யாழினியோட கையை பிடிச்சேன்.

டேய்..டேய்.. என்ன பன்றன்னு தெரிஞ்சுதான் பன்றியா? 
I will call the police!

சார்..என்ன பயம் காட்றீங்களா? Local Inspector number தெரியுமா?

யாழினி.. நான் இப்ப பண்றது Correct ஆ தப்பான்னு தெரில.       
ஆனா என் முழு மனசோட செய்யறேன்.   
நீ என்ன நம்புவன்னு தெரியும்.

அவ கைகள பிடிச்சு..                                                                     

 இது உன்னொட நம்பிக்கைக்கு!

அவ என்னை பாத்தா. என்னை மட்டும் தான் பாத்தா! அடுத்த நொடியே அவ விரலால மெல்ல 
என் விரல் பிடிச்சு அந்த Ring அ மாட்டி விட்டா.

அட.. இத இங்க photo எடுக்க ஒருத்தனும் இல்லயே!

இது என்னோட நம்பிக்கைக்குன்னு சொல்லி..
அவ கண்ண பாத்தேன்.

நாளைக்கு காலையில நான் வந்து உன்ன pick up பன்னிக்குறேன்.                                                                                           
வரன்... பொண்டாட்டினு சொல்லி திரும்பினேன்.         

Police இல்லனா என்னால எதுவும் பன்ன முடியாதுன்னு நெனைக்குறியா? 
உன்ன என்ன பன்னனும்னு எனக்கு தெரியும்.

சார்.. நான் எல்லாரும் என் காதல மதிக்கனும்னு நெனைக்குறவன், அத மாத்த நெனைக்காதீங்க!

எப்ப இவ என் கண்னு முன்னாடி இப்படி பன்னாளோ.. இனிமே அவளுக்கு இந்த வீட்ல இடம் இல்ல,

தேவையே இல்லங்கறன்!                                
யாழினி! வா போலாம்!

தம்பி.. நீங்களாவது கொஞ்சம் அவசரப்படாம நிதானமா இருங்களேன்.

இவளோ நேரம் பேசாத அவளோட அம்மா இப்பொ பேசும் போது எனக்கு என்ன சொல்றதுன்னே தெரியல.

எதாவது தப்பா பேசியிருந்தா என்ன மன்னிச்சுருங்கம்மா, 
என்னால உங்க அளவுக்கு பாசத்த அவளுக்கு குடுக்க முடியுமான்னு தெரியல.. 
ஆனா, என் அம்மா எனக்கு கத்து தந்த அன்ப ஒரு துளி குறையாம உங்க பொண்ணுக்கு நான் குடுப்பேன் மா. என்னை நம்புங்க!
வா யாழினி!

அவ கைகள புடிச்சு அப்படியே நடக்கும் போது எனக்குள்ள ஏதோ எல்லாம் கெடச்ச மாதிரி ஒரு கர்வம்!

அவள் மட்டும் தான் இருந்தாள்.
என் கண்ணோடும்.. என் கனவோடும்..
என் கரங்களோடும்!. என் தேவதை அவள்!
யாழினி! 


சாலை ஓரம்..
நானும் என் தேவதையும் ஊட்டி மலைல போய்ட்டிருக்கோம்.
அப்படியே ஆகாயத்துல பறக்கற மாதிரியே ஒரு feeling.   

நான் அப்படியே என் கார் கண்ணாடியில விழுகிற மழைத் துளிகள ரசிச்சிக்கிட்டு இருந்தேன். 

பட்டுனு திரும்பி என் left ல பாத்தா..
அவ என்ன அப்படியே பாத்துகிட்டு இருந்தா.

Hey Darling! வண்டி ஓட்டும் போது இப்படியெல்லாம் பாக்காத.

தெரியுதுல்ல..

அப்ப ஓரத்துல நிறுத்து..! நான் பேசனும்.

சிடு சிடுன்னு சொல்லிட்டு மெதுவா திரும்பிட்டா.

நான் கொஞ்சம் Over feel பன்னி என் பக்கத்துல இருக்குற அழக ரசிக்கவே மறந்துட்டேன்.                      

கொஞ்சம் rewind பன்னி பாத்தா..

அவ கூந்தல் அப்படியே ஜன்னலோர காத்துல அலை வீசுச்சு..                                            
அவ இதழ்களின் அசைவுகள் இந்த மழை சத்ததுல்ல..   

Beautiful!

But நான் அவ கிட்ட ஒரு வார்த்தை கூட பேசல.      
என்ன சொல்ல போறானு தெரியல.

சரி. இதுவும் கடந்து போகும் னு நினைச்சிட்டு Car அ அப்படியே ஓரம் கட்டுனேன்.

இப்ப சொல்லு..

நாம இப்ப எங்க போறோம் தீனா?

ஊட்டியில இருக்குற என் மாமா வீட்டுக்கு.
அவர் கிட்ட எல்லாம் சொல்லிட்டேன்.

ஏன் உங்க வீட்டுல சொல்லல?   

நான் எங்க அப்பா கிட்ட பேசிட்டேன்.
அவர் தான் நம்ம ரெண்டு பேரையும் ஊட்டி போக சொன்னதே!                                               

நம்ம ஊர்ல இருந்தா உன் அப்பாவால எதாவது பிரச்சனை வரலாம்ல                        
என் அப்பா நாளைக்கு உன் அப்பா கிட்ட பேச போறாரு. அப்போ நம்ம அங்க கண்டிப்பா இருப்போம்.

உங்க அப்பா தான் உன்னை வீட்ல சேர்க்க மாட்டார்னாரு 

அதனால தான் உன்னை என் கூட கூப்டேன். 
நீயும் வந்துட்ட!

என்னை அப்படியே ஒரு second  உத்து பாத்துட்டு அவ கன்னத்துல குழி விழுக சிரிச்சா..

என்ன நினைச்சானு தெரியல.. 
டப்புனு car கதவ திறந்து..       

ரொம்ப நல்லவனா நடிக்கிற.?

அப்ப நான் என்ன கெட்டவனா? சரி.. இப்ப ஏன் மழையில நெனையுற??

வெளிய நின்னு பேசலாமா?

She is crazy. ஆனா எனக்கு அவ கிட்ட பிடிச்சதே இது தான். She knows to live her life in the best way. அவளுக்கு என்ன பிடிக்குமோ அத செய்யுறதுக்கு ஒரு நிமிஷம் கூட தயங்கமாட்டா.

அவ சொன்ன உடனே சிரிச்சேன். 
பின் seat ல இருந்த குடை ய எடுத்துகிட்டு மெதுவா Car கதவ திறந்தேன்.

Hey  பொண்டாட்டி..இங்க வாடி.   

அவ விரல்களை மழையோடு பிடிச்சுகிட்டு அப்படியே நடக்க ஆரம்பிச்சோம்.

இனி இதழ்கள் போதும் அகம் இசைந்து விடும்
நித்தம் நிழல்கள் போதும் உயிர் நனைந்து வரும்
இதமே.!

இனி வீசும் காற்றை மெல்ல மழை நிறுத்தும்
நித்தம் கண்ட கனவை முகில் திரை விரிக்கும்
எழிலே!

மூனு வருஷமா சினிமாவுல ஒரு entryக்காக wait பன்னிட்டு ஊர் சுத்திட்டு இருக்கேன். உனக்கு பயமா இல்ல? நான் கூப்ட உடனே வந்துட்ட.

ம்ச்..ம்ச்.. இல்ல..

எனக்கு தெரியும் நீ என்ன எப்படி பாத்துப்பனு.
 நமக்கு பிடிச்சவங்களோடு இருந்தா வாழ்க்கையும் நமக்கு பிடிச்ச மாதிரி இருக்கும்னு நான் நம்பறேன்.

வீட்டுல நீ என் கைல இந்த  Ring அ மாட்டும் போது உன் கண்ணுல இருந்த உண்மையையும் அன்பையும் தான் பார்த்தேன். 
And இப்ப உன் கூடhappy ஆ நடந்துட்டு இருக்கேன்.

சகியே
நீளும் நம் நாழிகையே
வைகறை முழுமதியே
உயிர் தொட்ட தூரிகையே

நிலவே
விண் விட்டு வா வெளியே
என் அவள் விழி - வழியே நம்
மென் மொழி மெல்லிசையே


ஹ்ம்ம்ம்...தீனா! 
இனிமே உன்ன பத்தி யாராவது தப்பா பேசினா அவங்க மூக்குலயே குத்திருவேன்.                                   
எவளோ வருஷம் ஆனாலும் செரி..
எல்லாம் நான் பாத்துக்குறேன்.

நீ பாத்துப்ப இல்லையா? 
அப்ப நீ மொதல்ல குத்த வேண்டியது உங்க அப்பாவ தான்.   

சிரிக்க ஆரம்பிச்சா. 

நான் அதை ரசிச்சுக்கிட்டு இருந்தேன்.
மெதுவா சிரிப்ப நிறுத்திட்டு என் கண்கள பாத்தா.. 
அப்படியே என் பக்கம் திரும்பி..

என் இரு கைகளயும் பிடிச்சு.. 

எனக்கு இப்ப குடை வேண்டாம், நீ போதும்.

அத கேட்டதும். அப்படியே உடம்பெல்லாம் புல் அரிச்சுது.

அந்த குடைய அப்படியே கொஞ்சம் தள்ளி பிடிச்சேன்.
இப்ப அவ இதழ்கள மட்டும் தான் பார்த்தேன். 
அதுவும் மழையில.

அப்படியே அவ இடது கால கொஞ்சம் நிமிர்த்தி நின்னா. 
 Kiss பன்னலாம்னு போனப்ப..

நல்லவன் தான நீ?
கல்யாணத்துக்கு முன்னாடி Kiss பன்ன கூடாது னு சொல்லிட்டு 
பட்டுனு சிரிச்சுகிட்டே Car குள்ள போயிட்டா.
 
நான் அப்படியே shock ஆயி தனி ஆளா மழையில நின்னுட்டு இருந்தேன்.
அப்படியே கடுப்புல Car குள்ள போனன்.

இப்ப என்ன?

என்ன? ஒன்னும் இல்ல..

Seat belt அ போட்டுட்டு Car start பன்னு.

அவ சொன்னத அப்படியே செஞ்சேன்..
..புருஷன் ஆயிட்டனாமா..!


தீனா.. வாழ்கையில நம்ம எவ்வளவோ நொடிகள வாழ்ந்துருக்கோம்,
எதையாவது திரும்பி வாழ ஒரு வரம் கெடச்சா நான் வாழ போற நொடிகள் இது தான்.
I am sure that this will be an everlasting memory of my life Dheena. I Love you!

அத சொல்லி ஒரு நொடி கூட ஆகல.
எங்க கண் இமைகள் இரண்டும் உரசியது.
இப்ப… 
அவ இதழ்கள் என் இதழ்களுடன்.

இதுக்கு முன்னாடியும் Kiss பன்னிருக்கோம்.
But this is something special for both of us!

நாங்க காதலிக்க ஆரம்பிச்சு இன்னையோட அஞ்சு வருஷம் முடியுது.


நிகழ்வுகள்..
அதுல சிலது வந்து ஒரு மறக்க முடியாத நினைவுகளா மாறும். 
சிலது மறக்க வேண்டிய ஒரு விபத்தா இருக்கும். 
ஆனா இது ரெண்டுக்குமே ஒரு  நொடி தான் இடைவேளை னா?

அது தான் இப்ப எனக்கு நடந்துச்சு.

தீடீர்னு பளிச்சுன்னு ஒரு வெளிச்சம் என் car முன்னாடி
.
என் car பின்னாடி ஏதோ ஒரு tempo truck ஓ வந்து மோதுச்சு.                                                                                                            
என் seat belt என்ன இறுக்கி பிடிக்க.. 
என் கண் முன்னாடி யாழினி. 
அவ இதழ்கள் துடிக்க, பயத்தால அவ புருவங்களை உயர்த்தி ஒரு பார்வை பாத்துட்டே..
Car கண்ணாடியை உடச்சுட்டு வெளியே விழுந்தா.

அப்ப எனக்கு தோனுனதெல்லாம் ஒரு விஷயம் தான்.

அப்படியே என் Seat belt அ தூக்கி எரிஞ்சு அவள என் கையால தாங்கனும். 
வலிய பொருத்துக்க சொல்லனும். நான் இருக்கேன் அவளுக்காகன்னு சொல்லனும்.

ஆனா என் தலையில பயங்கர அடி..
அதுல மயங்கி விழுந்தேன்.

அவளோட கண்கள் நான் இமைகள மூடுற வரைக்கும் 
என் கண்ணுக்குள்ளயே இருந்துச்சு.