அன்னையே..!
உன் உணர்வுகளுக்கு வேலி போட்டு என் உயர்வை நாடி நின்றாயே..!
உன் கனவுகளை கலைத்து விட்டு என் கண்ணீர் துடைக்க
விரைந்தாயே..! உன் எண்ணமெல்லாம் என் நலம் கருதியே என...
உன் குருதியில் உறுதி கொண்டாயே..!
என் கனவுகள் கண்களில் இருக்க...
அவற்றை உன் கரங்கள் வழியே என்னிடம் சேர்த்தாயே தாயே..!
உன் நினைவுகளின் ஈரம் என் நெஞ்சினில் இருக்க..
என் இதயத்தில் மழையாய் மலர்கிறாயே..!
என் இதயம் இடப்பக்கம் இருக்க...
உன்னிடம் இனைந்து இசைக்கிறதோ..?
என் பாதம் உன் பாசம் புரிந்து..
புவியினில் நகர்கிறதோ..??
என் கண்கள் கரையோர கண்ணீர் துளிகளை அணைக்க..
உன் அன்பலைகள் என்னுள் அலைகிறதோ..??
என் வேர்களில் சிந்திய உன் வேர்வை துளிகளின் ஈரத்திலே..
என் மனதில் மறைந்திருந்த மொட்டுகள் மொத்தம் மலர்ந்து மனம் வீசுமே..!
தீப்பொறிகளாய் கோவமாய் சிதறும் உன் அன்பில்
என் தவறுகள் மொத்தம் அழியுதே..!
உன் மாற்றங்களுக்கேற்ப தண்ணீராய்..
என்னை உன்னுள் நிரப்பி நகர்வேன் --- என்றும்
உன் அகத்தின் ஆசைகளுக்கேற்ப..
உன்னை என்னுள் உணர்ந்து உயர்வேன்..!