கூந்தல் அலை பாயும் கடலில்..
மங்கையின் மனம் புனித மலர்களையும் மிஞ்சும்!
துள்ளி எழுந்த மீன்களாய் நெற்றியில் தவழும் இரு முடிகளை
அவள் பொன் விரல்களால்..
அவள் காதுகலேன்னும் கரையோரம் சேர்பவள் -என் தேவதை அவள் !
அவள் கம்மலின் ஓசையில் ஆயிரம் தாலாட்டுகளை ஒலிக்க சொல்பவள் - என்னவள் !
போர்க்களம் ஆயிரம் கண்ட காளையையும்..
தன் இரு கண் அசைவினால் மெய் சிலிர்க்க வைக்கும் - கண்ணழகி அவள் !
தம் கன்னங்களின் சர்மத்தில் சர்வத்தையும் உணர்த்தும் - என் சகலமும் அவள் !
தேவதை அவளது உதடுகளை உரசிட உத்தமபுத்திரனை எதிர்நோக்கி..
உண்ணாவிரதம் கொண்ட என் கண்ணகி அவள் !
அவள் யாரோ எவளோ???
என் கனவுகளில் கடந்த என்னவள் அவள் !
No comments:
Post a Comment