என்றும் என் கண்களில் மிதப்பாள்.!
கண்ணீரைத் துடைப்பாள்..!
என் பாதைகளிள் இருப்பாள்.!
நான் சாதிக்க துடிப்பாள்..!
அம்மா..
புயலாக துன்பங்கள் உன்னை தீண்டினாலும்..
உன் மரமான மனதில்..
என்றும் நான் இறக்காத இலைகளோ..??
நீரோடையான இன்பங்கள் உன்னை சுற்றிருந்தாலும்..
உன் கடலான கனவில்..
என்றும் நான் மறையாத மழைத்துளிகளோ..??
உன் கோபமான அம்புகளில்..அன்பான பண்புகள் உணர்வேன்!
என் பாதைகள் முழுவதும்..
மின்னலான உன் மின்விளக்குகளை அறிவேன்..!
விண்ணை நோக்கிய வாழ்விற்காக..
தன்னை அற்பணித்த அன்னையே..!
உன் பாசம் ..
அதற்கில்லை காரணம்..
உன் நேசம்..
அதற்கில்லை மரணம்.!!!
No comments:
Post a Comment