உன் பிரிவில் தவறு செய்ய மனம் துடித்ததடி
என்னை அவை காயப்படுத்த..!
உன் காதலில் தவறு செய்ய மனம் திணருதடி
உன்னை அவை காயப்படுத்துமென..!
கற்பனையாய் கவரும் உன் கன்னக்குழி வழியே கண்ணீர் துளிகள் இனி கடக்காது..!
சிற்பமாய் செதுக்கிய நம் சிந்தனைகளில் நம் சினங்கள்கள் இனி சீண்டாது..!
நம் காலங்கள் இனி காயங்களை காணாது..!
நம் கனவிலே.. நினைவிலே.. காதலிலே..
சிறு சிறு உணர்வுகளும் இனி சிதறாது..!
இனி நம் வாழ்வில்..
இருளிலும் நம் நிழல் இணைய நம் காதல் காணும் ..!
கண்ணீர் துளியிலும் பணித்துளி காண நம் தேடல் தீண்டும்..!
எனது மொத்தம் உன் முத்தத்தில் இழக்கிறேன்..!
நித்தம் உன் நினைவுகளில் வாழ்கிறேன் ..!
No comments:
Post a Comment