நம் காதல் கரையில் உன் பாதம் தழுவ அலைகளாய் போராடுவேன்..!
என் காதாலை நீ உணரும் வரை தென்றலாய் உன்னை சூழ்ந்திருப்பேன் ..!
கண்ணீர் உன் மழையானால் என் கண்கள் அங்கே கதிராகும்..!
என் காதல் உன் உயிரானால் துன்பம் உனக்கு தூரமாகும்..!
பழக்கமில்லா பாசத்தை பகிர்ந்து கொண்டாயடி.!
வழக்கமில்லா வாலிபத்தை வழங்கி சென்றாயடி ..!
இரு விழி இமை வழியே என் இதயத்தை இழுத்து செல்லாதே..!
உன் பிரிவை உணர தனியே என்னை தவிக்க விடாதே..!
இருளை போக்கும் என்னிலவே.. வெண்ணிலவே....
நம் விடியலை துறந்து ஒரு நொடியும் விலகாதே..!
என்றும்...
நம் புரிதலை பிரிந்து ஒரு நாடியும் இயங்காதே..!!
No comments:
Post a Comment