உணர்வுகளாய் என் உயிருடன் உருகினாயடி ..!
கனவுகளாய் என் கண்களில் கலந்தாயடி...!
நினைவுகளாய் என் நெஞ்சத்தில் நின்றாயடி..!
உணர்வென....என் உயர்வென கண்டேன்.....
உன்னை....
கனவென....என் காதலென கொண்டேன்..!
விழியென...என் வழியென கண்டேன்.....
உன்னை....
ஒளியென....என் மொழியென கொண்டேன்...!
உன் பாதங்களை துறந்தாலே...
என் பாதைகள் பழுதாக கண்டேன்...!
என்னவளே...
என் இமைகளில் துடிக்கும் இதயம் நீ..!
என் கற்பனைகள் தீண்டும் கவிதை நீ..!
என் காதல் செதுக்கும் சிற்பம் நீ..!
என் பாசம் பாதுக்காக்கும் பொக்கிஷம் நீ..!
காதலே..
உன் இதழில் இன்பங்கள் புதைப்பேன்..!
உன் வாழ்க்கையில் வெற்றிகளை விதைப்பேன்..!
ஆருயிரே..
உன் காதலில் ஜனனம் உணருகிறேன்..!
உன் மடியில் என் மரணம் வேண்டுகிறேன்...!!!
No comments:
Post a Comment