Total Pageviews

Thursday, June 2, 2011

THE REAL BEAUTY- வாழு..! வாழ விடு..!

இருளில் உதயமாகி உதவும் வெண்ணிலவும் அழகு தான் ..!  
இயலாத மனிதனுக்கு இயல்பாய் உதவும் கரங்களும் அழகு தான்..! 
 

 
ஊனத்தின் ஊக்கத்திற்கு உயிர்  தரும் மனித மனங்களும் அழகு தான் ..!
தீண்டாமையை தீயிட்டு அழிக்க உதவும் மனித தீப்பொறிகளும் அழகு தான் ..!
குழந்தையின் சிரிப்பிற்கு கோமாளியாய் உருவெடுக்கும் அன்னையின் காதலும் அழகு தான்..!
நம் இழப்பால் ஒருவர் கண்ணீர் சிந்தினால் நம் கல்லறையும் அழகு தான் ..!
பிறர் நலத்தை நாடினால் இந்த பூமிக்கு நம் நிழலும் அழகு தான் ..!
 நம் உழைப்பு சிலர் தேவைக்கு உதவினால் அவர்களின் வாழ்த்துகள் நம் மனதிற்கு அழகு தான்..! 

ஒரு மனிதன் தவறை உணர்ந்த பிறகு அவன் செய்த தவறுகளும் அழகு தான் ..!  
நாம் செய்யும் உதவிகளான மழைத்துளிகள் சிலதாக இருந்தாலும்.. 
அதன் பயனான மண் வாசனையை பலரும் உணர்ந்தால்  அழகு தான்..!  

 வறுமையும் அழகு தான் அதில் அன்பின்  வண்ணங்கள் நம் மனதில் கலையாத வரை..!
 மரணம் அழகு தான் நம் மனதில் அதன் எண்ணம் மறையாத வரை..!

அழகு என்பது நாம் நினைக்கும் வெளித்தோற்றத்தில் அல்ல ..!
பிறர் மனங்களில் நாம் உருவாக்கும் இனிய மாற்றங்களில் ..!!!!
அழகை பிறர் மனதில் விதைத்து நாம் காண வேண்டும் ..!
அந்த அழகிலே தான்  தெய்வங்கள் வாழ்வதை நம்மால் உணர முடியும் ..!
அந்த அழகின் வெண்ணிறம் மாறாது நம் மனதில்.. 
 அந்த அழகின் தோற்றம் வெளிப்படாது நம் விழிகளில் ..!!!! 

                  


            வாழு..! வாழ விடு..!
               
               
 CONTENT OF MY POEM TRANSLATED IN ENGLISH

The moon which portrays itself in darkness reveals the real beauty..!
Helping hands by nature for the persons incapable reveals real beauty..!
Hearts of persons serving as an encouragement factor for the disability reveals real beauty..!
Persons who help in lighting fire to Untouchability reveals real beauty..! 
Mother turning into a Clown to see her baby smile reveals real beauty..!
The Yelp of a person who feels our absence  makes even our funeral reveal real beauty..!
Caring for others make even our shadows in this soil to reveal real beauty..!
If our hard work serves the necessity of others  then our hearts reveal real beauty..!
If a man realises his mistakes then his wrong deeds also reveals real Beauty..!
We might help others with only few rain drops but the fragrance felt by more number of people due to that reveals real beauty..!
Being poor will reveal real beauty If love does not change its colours often..! 
Our death will reveal real beauty only when its thought does not fade away in our hearts..!
The Real beauty is not in External looks..!
It makes its presence in the lovely changes that we bring in the hearts of others...!
We have to see the real beauty by depicting it in others hearts..!
We can feel the presence of God only in such beauty..!
Purity of such beauty  will  never change in our hearts..!
The looks of such beauty can never be seen through our eyes..! ------ Koushik.R

I have written this post for Yahoo! India and Dove "I Believe in Real Beauty" under the topic "What does real beauty mean to me?"  Dont forget to visit http://realbeauty.yahoo.com/.
If you like my post, Do '' FB like" or you can vote for me on Indivine

                           LIVE AND LET LIVE..!


2 comments:

  1. beautifully portrayed the real beauty of life,,,keep goin...awesome!!

    ReplyDelete
  2. arumai nanba... here is a heart expressing what does true beauty means

    Someone is Special

    ReplyDelete