Total Pageviews

Tuesday, June 7, 2011

என் மொத்தம் இழந்தேனே.. அவள் காதலில்..!

அந்த மேகங்களும் என்னுடன் காதலில் மறைகிறது !
அதில் நம் பிரிவின் கண்ணாடி உடைந்து சிதறுகிறது !
நம் கனவுகள் நிறைய வெண்ணிலவும் இருளில் ஒளிருகிறது !
நம் உணர்வுகள் ஊற அந்த கடலும் என் காதலில் மிதக்கிறது !
காதலே ..
நம் காதல் வானத்தில் மறையகூடாது வானவில்லான இன்பங்கள் !
இனி நம் புரிதல் பிரியத்தில் பிரிந்து பூக்காது  நம் புன்னகை பூக்கள் !
என் இதயத்தில் இடைவேளை இன்றி இன்பத்தை புதைத்தாயடி !
உன் காதலை மிச்சம் இன்றி நித்தம் உணர்ந்தேனே..!!
என் மொத்தம் உன்னிடம் இழந்தேனே !!
பிரிதல் பிழையில்லை பிரியமானவர்களின் பிரியத்தை பெருக்கினால்..!
காலத்தில் உயிரில்லை காமத்தை கடந்து காதலை துறந்தால்..!
காத்திருந்து ..காத்திருந்து .. காதல் கொள்கிறது இரு விழிகள்..!
இனி..
பிரிந்திருந்த நம் புரிதல்கள் பதிக்கும் நம் பாசத்தின் பாத சுவடுகள்!!
என் காதல் - பூக்கள் என்றால்.. 
அதல் இலைகள் தானாக உதிருமா..??
இல்லை.. 
உன்னால் பரிக்கபடுமா..??
என் மூச்சு காற்று.. உன் ஸ்வாச காற்றுடன் கலக்குமோ..?? 
இல்லை..
மரண காற்றில் மாயமாகுமோ..??

 

 

No comments:

Post a Comment