பூக்கள் மணம் மாறியதோ??அன்று..
என்னவளின் ஸ்வாசம் கொண்டு...
உன் பாதைகள் வானவில்லானதோ??இன்று..
பாவையின் கரு விழிப்பார்வையை கண்டு...
அழகே!!..
நீ பிறந்த தருணம்!..
மூன்றாம் பிறையும் முழுநிலவானது!..
உன் அழகை கண்டு...
வெண்ணிலவும் வெண்மை இழந்தது!..
மின்னல்கள் ஒளி வீசும்!..
உன் வாழ்க்கை இருள் சூளாமல் இருந்து விட!..
விண்மீண்கள் ஒளி விளக்குகளாகும்!..
உன் காற்றால் அனைந்து விட!..
இன்று முதல்!..
உன் பாதைகள் முழுவதும்..
புன்னகை பூக்கள் பூத்து மணம் வீச..
என் பிறந்தநாள் நல்வாழ்த்துகள்!..
No comments:
Post a Comment