Total Pageviews

Tuesday, May 31, 2011

நண்பன் ..!!!


நட்பில்.. 
உதவிகள் எதிர்பாராது.. 
உண்மைகள் சிதைந்து போகாது.. 
உரிமைகள் உதிராது... 
சிரிப்புகள் சிதறாது.. 
போலி மந்திரங்களில் தோன்றும் புன்னகை புவியிலே.. 
மறைவுகள் இல்லாமல் மகிழ்ச்சியை உணரும் நிரந்தரம் நட்பு ..!!
இமைகளின் முனையில் இமயமாகும் நட்பு..! 
இதய துடிப்பில் சிறை கொள்ளும் நட்பு..! 
ஊஞ்சலாடும் கனவுகளின் கரங்கலாகும் நட்பு..!
ஊடல் கொள்ளும் உறவுகளில் உரிமை கொள்ளும் நட்பு..!
நட்பு...
கடலுக்குள் கலந்து சிறக்கும் மழைத்துளியோ..??
உயிருக்குள் உணரும் உயர்நிலை உறவோ..?? 

Sunday, May 29, 2011

காதலாகி ..!!


தீண்ட துடிக்கவில்லை காதல்..! 
பிறர் சீண்ட  மறையவில்லை என் காதல்..! 
பூத்து மலரவில்லை என் காதல் ..!
நீ சீறியும் சிதறவில்லை என் காதல் ..!
மழைத்துளிகலான மனகதரல்கள் என்னை நெருங்காமல் அனல் காற்றால் அடித்து சென்றாயடி !!
உன் விழியிலே என் வழியை விதைத்தாயடி ..!
என் கனவிலே உன் காதலை புதைத்தாயடி..! 
ஆருயிரே ...
உனக்காக வாழ்கிறேன்.. 
உன் உயிரில் என்னை செதுக்குகிறேன் ..!

Saturday, May 28, 2011

விலகாதே வெண்பனியே ....!!!


நம் காதல் கரையில் உன் பாதம் தழுவ அலைகளாய் போராடுவேன்..!
என் காதாலை நீ உணரும் வரை தென்றலாய் உன்னை சூழ்ந்திருப்பேன் ..!
கண்ணீர் உன் மழையானால்  என் கண்கள் அங்கே கதிராகும்..!
என் காதல் உன் உயிரானால் துன்பம் உனக்கு தூரமாகும்..! 
பழக்கமில்லா பாசத்தை பகிர்ந்து கொண்டாயடி.!
வழக்கமில்லா  வாலிபத்தை வழங்கி சென்றாயடி ..!
இரு விழி இமை வழியே என் இதயத்தை இழுத்து செல்லாதே..! 
உன் பிரிவை உணர தனியே என்னை தவிக்க விடாதே..!
இருளை போக்கும் என்னிலவே.. வெண்ணிலவே....
நம் விடியலை துறந்து ஒரு நொடியும் விலகாதே..!
என்றும்...
நம் புரிதலை பிரிந்து ஒரு நாடியும் இயங்காதே..!! 


காதலில் பிரிதல் புரிதலாகிறது !!


உன் பிரிவில் தவறு செய்ய மனம் துடித்ததடி
என்னை அவை காயப்படுத்த..! 
உன் காதலில் தவறு செய்ய மனம் திணருதடி
உன்னை அவை காயப்படுத்துமென..!
கற்பனையாய் கவரும் உன் கன்னக்குழி வழியே  கண்ணீர் துளிகள்  இனி கடக்காது..! 
சிற்பமாய் செதுக்கிய நம் சிந்தனைகளில் நம் சினங்கள்கள் இனி சீண்டாது..!
நம் காலங்கள் இனி காயங்களை காணாது..!
நம் கனவிலே.. நினைவிலே.. காதலிலே..
சிறு சிறு உணர்வுகளும் இனி சிதறாது..!  
இனி நம் வாழ்வில்..
இருளிலும் நம் நிழல்  இணைய நம் காதல் காணும் ..!
கண்ணீர் துளியிலும் பணித்துளி காண நம் தேடல் தீண்டும்..!
எனது மொத்தம் உன் முத்தத்தில் இழக்கிறேன்..!
நித்தம் உன் நினைவுகளில் வாழ்கிறேன்   ..!    

Thursday, May 26, 2011

ஏக்கங்கள் நிறைந்த பிரிவின் காதல்..


என் பாதம் கிழித்த மன கண்ணாடி 
இன்று பாவை முகம் காட்டுதே!! 
என் தேகம் நிறைந்த உன் நாடி என் தவறுகளை மொத்தம் தாக்குதே !!
இரு கரங்கள் இணைந்தாலே..
கண்ணீர் கலங்காது கண்களிலே !
இரு மனங்கள் இணைந்தாலே..
காயங்கள் மாயமாகும் நம் நெஞ்சினிலே !
நான் காத்திருக்க பார்த்திருந்த  பாவை..
அவள் காதலை என் காதலில் செதுக்கிநாளோ?? 
நாம் சேர்ந்திருக்க நினைத்திருந்த நம் தேவை..
இனி நம் கண்களின் காதல் வழி நிறையுமோ ??

காத்திருக்கும் காதல்..!! என் காலங்களும் கூட !!!!!!!!!!

என்ன‌வ‌ளே..!!
என் நிழலில் உன்னை விதைத்தேன்..
என் விய‌ர்வையில் உன்னை வ‌ள‌ர்த்தேன்.!
காத‌லே..
காத‌லில் ம‌றைந்து போகிறேன்..
காத்திருந்து தொலைந்து போகிறேன்.!
ம‌ழை சிந்தினால் அத‌ன் அன்பை ம‌ண் வாச‌ம் பேசும்

ஆனால் இங்கு க‌ண்ணீர் சிந்தியும் பெண்நேச‌ம்              
 பொய்க‌ளை வீசும்!
காத‌லித்த‌ நெஞ்ச‌ங்க‌ளுக்கு..
க‌ர‌ம் பிடிக்க‌ தெரிய‌வில்லையோ
காத்திருக்க‌ ம‌ன‌மில்லையோ???

அவள் என்னவளோ..?? எனக்கென பிறந்தவளோ ....??


மேகமாய் என்னை பிரிந்து 
அவள் காதலை உணர வைத்தாள்...!!
வெண்ணிலவாய் இருளில் தோன்றி 
என் தோல்விகளில் உடன் நின்றாள..!! 
மொட்டுகளாய் இருந்த திறமைகளை 
அவள் ஊக்கத்தில் பூக்க  வைத்தாள்..!!
பகல் நிலவாய் என் வெற்றி வானவில்லை 
ஒரு ஓரத்தில் கண்டு ரசித்தாள..!!
 
 அவள் ஒரு பாதியை 
என் பாதையில் விதைத்து விட்டாள்..!!
அவள் மறு பாதியை
என் மனதில் புதைத்து விட்டாள்..!! 
 
 
இனி வரும் நாளையில்.. 
என்றும் அவள் கண்களில்.. 
கண்ணீரை துடைக்கமாட்டாள் ..!! 
 
 
அவள் என்னவளோ..??
எனக்கென  பிறந்தவளோ ....??

அம்மா..


என்றும் என் க‌ண்க‌ளில் மித‌ப்பாள்.!
கண்ணீரைத் துடைப்பாள்..!
என் பாதைக‌ளிள் இருப்பாள்.!
நான் சாதிக்க‌ துடிப்பாள்..!
அம்மா..
புய‌லாக‌ துன்ப‌ங்க‌ள் உன்னை தீண்டினாலும்..
உன் ம‌ர‌மான‌ ம‌ன‌தில்..
என்றும் நான் இற‌க்காத‌ இலைக‌ளோ..??
நீரோடையான‌ இன்ப‌ங்க‌ள் உன்னை சுற்றிருந்தாலும்..
உன் க‌ட‌லான‌ க‌ன‌வில்..
என்றும் நான் ம‌றையாத‌ ம‌ழைத்துளிக‌ளோ..??
உன் கோப‌மான‌ அம்புக‌ளில்..அன்பான‌ ப‌ண்புக‌ள் உணர்வேன்!
என் பாதைக‌ள் முழுவ‌தும்..
மின்ன‌லான‌ உன் மின்விள‌க்குக‌ளை அறிவேன்..!
விண்ணை நோக்கிய‌ வாழ்விற்காக‌..
தன்னை அற்ப‌ணித்த‌ அன்னையே..!
உன் பாச‌ம் ..
அத‌ற்கில்லை கார‌ண‌ம்..
உன் நேச‌ம்..
அத‌ற்கில்லை ம‌ர‌ண‌ம்.!!!